5 வருட மூலோபாய திட்டமிடல் வெளியிடல்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் கடந்த 20 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள எம். ஐ. ஸீ. எச். கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.
இந்த நிகழ்வு தேசிய ஷூரா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் மூன்று அமர்வுகளாக இடம்பெற்றது.
முதலாவதாக ஆலோசனை அமர்வு (Consultative Forum) இடம்பெற்றது. இந்த அமர்வில் நிறைவேற்றுக்குழு, பொதுச் சபை, செயலக உறுப்பினர்கள், புதிதாக தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபை உறுப்பினர்கள், மாகாண, மாவட, பிராந்திய மட்டங்களில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், துறைசார் நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய ஷூரா சபையின் தோற்றம், அதன் வளர்ச்சி, அது கடந்து வந்த பாதைகள் தொடர்பாக தேசிய ஷூராசபையின் தலைவர் அல் ஹாஜ் தாரிக் மஹ்மூத் தலைமை உரையின் போது விளக்கமளித்தார்.
தேசிய ஷூரா சபை கடந்த இருவருட காலமாக சமூக தேசிய மட்டங்களில் மேற்கொண்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக முன்னால் செயலாளர் சகோ.இஸ்மாயில் ஏ அஸீஸ் தெளிவுபடுத்தினார்.
”ஷூரா” என்ற கோட்பாட்டை இலங்கை முஸ்லிம் சமூகம் மத்தியில் சரியான முறையில் அமுல்படுத்தி அதனை நடைமுறை ரீதியான கற்கைகளுக்கான காலமாக கடந்த இரண்டு வருடங்களையும் நாம் பார்க்கின்றோம். இந்த கற்றல்களை மையமாக் கொண்டு ஷூராவை நிலைப்படுடத்திக் கொள்வதற்கான உபாயங்களாக கடந்த கால நிகழ்வுகளை கருதலாம்.
தேசிய ஷூரா சபையின் முக்கிய நோக்கம் வேலைத்திட்டங்களும், செயற்பாடுகளுமல்ல.சமூக, நாடு தளுவிய முக்கியத்துவம் வாய்ந்த விடையங்களில் கலந்தாலேசனை செய்து முக்கிய தீர்மானம் எடுப்பதுதான்.
எனவே கடந்த இரு வருடங்களையும் நாம் வெற்றிகரமான வருடங்களாக கருதுகின்றோம். ஏனெனில் முஸ்லிம் சமூகம் தொடர்பான கொள்கை அளவிலான விடையங்களில் விளிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளோம். அத்துடன் இந்த நாட்டில் கொள்கை வகுப்பாளர்களிடமும் தீர்மானம் எடுப்பவர்களிடமும் எமது பணிகளை எடுத்துச் சென்றுறோம்.
தேசிய ஷூரா சபையின் எதிர்கால பணிகள், நகர்வுகள் தொடர்பாகவும் எதிர் வரும் ஐந்து ஆண்டுகளுக்கான திட்டமிடல் தொடர்பாகவும் சபையின் மூலோபாய திட்டமிடல் உப குழுவின் தலைவரும் கட்டட நிர்மாணத்துறை பொறியியல் நிபுணருமான சகோ. ரீஸா யஹ்யா தெளிவுபடுத்தினார்.
சமகாலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் மூன்று அம்சங்களில் போதிய கரிசனையோடு செயற்பட வேண்டும் என அவர் வலியிறுதினார்.
அவை முதலாவதாக, இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதார நிலை. இரண்டாவது, சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வரும் மாற்றங்களும் அவற்றின் விளைவாக எற்படுகிற சாதக பாதகங்களும், மூன்றாவதாக, நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் மாற்றங்களை முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் போது ஏற்படுதுகின்ற தாக்கங்கள் என்பனவாகும்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இலங்கை முஸ்லிம் சமூம் இந்த நாட்டில் சமூகத்திக்கும் நாட்டிற்க்கும் அதிகம் பங்காற்றக் கூடிய சமூகமாகவும், இந்த நாட்டில் வாழ்கின்ற எனைய சமூகங்களால் அங்கிகரிக்கப்பட்ட சமூகமாகவும் மாற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் எமது முஸ்லிம் சமூகத்தை நிர்வகிக்கக் கூடிய தலைமைகளுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாகவும் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மூலோபாயத் திட்டமிடல் தொடர்பாக போதிய கரிசனை செலுத்தப்பட வேண்டும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்த இடைவெளி ஆன்மிக, அரசியல், பொருளாதர தலைமைகளுக்கிடையில் பலமாக இருப்பதாகவும். இந்த தலைமைகளுக்கிடையிலான இடைவெளிகளை நீக்கி அவர்களுக்கிடையில் ஒருமையப்பாட்டைஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
எமது சமூகம் பிரச்சினையின் அங்கமாக இந்த நாட்டில் இருக்கின்ற இந்த நிலை மாறி தீர்வின்அங்கமாக மாற வேண்டும் இதற்காக கல்வி, தமைத்துவம், வழிகாட்டல், ஊடகம், வள முகாமைத்துவம், அவசர அனர்த்த மூகாமைத்துவம், வடக்கு கிழக்கு மீள் குடியேற்றம், மக்கள் தொடர்பாடல், நல்லிணக்க பொருளாதாரம், பொதுச் சுகாதாரம், சட்டம் தொடர்பான சமூகக் கூறுகளுக்கு தீர்வினை முன்மொழிந்து செயற்படவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமூம் இந்த நாட்டில் உள்ள ஏனைய சமூகளிலிருந்து மாறுபட்ட பிரத்தியோக சமூம் என்ற வகையில் கடந்த காலத்தில் இந்த சமூக வேறுபாடுகள் இன வன்முறையாக வேடித்துள்ளன. முஸ்லிம் சமூகம் தொடர்பான அடையாளத்தை இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்கள்களுக்கும் உரிய முறையில் தெளிவுபடுத்துவதுடன் சமூகத்தை வழிநடத்த வேண்டிய தேவையுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் :
இதன் பின்னர் தேசிய ஷூரா சபையின் எதிர்காலச் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக பொதுச் சபை உறுப்பினர்களது கலந்துரையாடல் இடம்பெற்றது. பின்வரும் கருத்துக்கள் அதில் பரிமாறப்பட்டன.
1.முஸ்லிம் சமூகத்தை முழுமையான பார்வையில் பார்த்து சமகாலத்தில், எதிர்காலத்தில் நிலவக் கூடிய தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கான முன் மொழிவுகளை வைக்கும் சபையாக தேசிய ஷூரா சபை இருக்க வேண்டும் .
2.தேசிய ஷூரா சபை சமூகத் துறைகளில் நிலவும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அந்த பிரச்சினையை குறைப்பதற்காக அல்லது நீக்குவதற்கான வேலைத் திட்டங்களை தமது அங்கத்துவ அமைப்புகளுக்கு பகிந்தளிப்பதுடன் நின்று விடாது அதனையும் நிர்வகித்தல், ஊக்கப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
3.கடந்த காலத்தில் தேசிய ஷூரா சபை இந்த நாட்டில் அடைந்த அடைவுகள் தொடர்பாக மதீப்பீடுகளை செய்துஅதனை முன்னேற்றுவதற்கான வழிவகைகளை தேட வேண்டும்.
4.தனிமனித தலைமைத்துவ ஆதிக்கத்தை தகர்த்து ஷூரா முறைமையிலான தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உருவாக்குதல் வேண்டும்.

நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் தெரிவு
இரண்டாம் அமர்வின் போது ஷூரா சபையின் பொதுச் சபை அங்கத்தவர்களால் இரண்டாவது நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் அடுத்த இரு வருடங்களுக்கான (2016-2017) நிறைவேற்றுக் குழுவினராக இயங்குவர்.
அங்கத்துவ நிறுவனங்கள் சார்பாக தலா ஒவ்வோர் அங்கத்தவரும், துறைசார் நிபுணர்களுமாக மொத்தம் 28 பேர் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் நடப்பு ஆண்டுக்கான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட தோடு அதில் office bearers தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
அவர்களது விபரம் வருமாறு:
கெளரவ தலைவை:
சகோ. ஜே. தாரிக் மஹ்மூத்

உப தலைவர்கள்:
அஷ்.ஷேய்க் எஸ்.எச்.எம் பழீல் (நளீமி)
சட்டத்தரணி சகோ. டீ. கே அஸூர்
பொறியியலாளர் சகோ. ரீஸா யஹ்யா

கெளரவ பொதுச்செயலாளர்:
சட்டத்தரணி சகோ. மாஸ் எல். யூஸுப்

உதவிப் பொதுச்செயலாளர்:
சகோ. எம். டீ தாஹாசிம்
சகோ. எம். பார்ஸான் ராஸிக்

பொருலாளர் :
அஷ்-ஷேய்க் ஸியாத் இப்ராஹீம் (கபூரி)

உதவிப் பொருலாளர்:
சகோ. எம். ஆர். எம் ஸரூக்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s